’நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்’.. பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய சீரியல் நடிகை ரேகா ஏஞ்சலினா..

சீரியல் நடிகை ரேகா ஏஞ்சலினா..

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியலில் வாணி என்ற காமெடி கேரக்டரில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த ரேகா ஏஞ்சலினாவிற்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

  • Share this:
புதுமையான நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஒளிபரப்பி தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் முன்னணி தமிழ் டிவி சேனல்களில் ஒன்று கலர்ஸ் தமிழ். இந்த சேனலில் கடந்த 2018 அக்டோபர் 8 முதல் - 2020 அக்டோபர் 16 வரை சுமார் 500 எபிசோட்கள் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களை மகிழ்வித்த ஒரு சீரியல் "திருமணம்". 

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2-வில் ஹீரோவாக நடித்து வரும் சித்து முதன் முதலில் திருமணம் சீரியலில் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதே போல இவரது நிஜவாழ்க்கை பார்ட்னரான ஸ்ரேயா அஞ்சனுடன் இதில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சித்து. திருமணம் சீரியலில் சந்தோஷ் கேரக்டரில் நடிகர் சித்துவும், ஜனனி கேரக்டரில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்தனர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக ஜனனியை கல்யாணம் செய்து கொள்ளும் சந்தோஷ், ஒருகட்டத்தில் அவரை விவாகரத்து செய்கிறான். பின்னர் அவர்களிடையே அன்பு மற்றும் வெறுப்பு கலந்த உறவு அப்படியே துண்டானதா அல்லது துளிர்த்ததா என்பதே திருமணம் சீரியாளின் கதையாக இருந்தது.இந்த சீரியலில் வாணி என்ற காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டான்ஸ் மாஸ்டரான ரேகா ஏஞ்சலினா. ஆண் பாவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னாளில் டான்ஸ் மீதான ஆர்வத்தால் முன்னணி டான்ஸ் மாஸ்டர்கள் பலரிடம் முறையாக நடனம் கற்று கொண்டார். தற்போது வளசரவாக்கத்தில் டான்ஸ் ஸ்கூலும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேகா ஏஞ்சலினா, ஆகஸ்ட் 4 அன்று தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது பிறந்தநாளை மறக்கமுடியாத வகையில் கொண்டாட சில சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது பற்றி இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களில் ரேகாவுடன் நடித்த நடிகர் அமுதன், இயக்குநர்கள் அரவிந்த், ஆன்டோ மற்றும் பலர் ரேகாவிற்கு ஸ்பெஷல் கேக் ஏற்பாடு செய்து அவருக்கு சர்ப்ரைஸ் அளித்தனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்கள் முன்னிலையில் அந்த ஸ்பெஷல் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் ரேகா ஏஞ்சலினா.பிறந்தநாள் கொண்டாட்ட ஃபோட்டோக்களை ஷேர் செய்த ரேகா, "என் அன்பு நண்பர்களால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இது ஒரு அற்புதமான மற்றும் மறக்க முடியாத பிறந்தநாள் சர்ப்ரைஸாக அமைந்தது" நன்றி பாப்பி, மீனா, (நடிகர் அமுதன் சார்) இயக்குனர் அரவிந்த் மற்றும் ஆன்டோ !!! பெஸ்ட் சர்ப்ரைஸ் பிரெண்ட்ஸ். அனைத்து மீடியா நண்பர்களே, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு போஸ்ட்டை ஷேர் செய்துள்ள ரேகா, "எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு மிகுந்த நன்றியைத் தருகிறது.நீங்கள் அனைவரும் எனது நாளை மிகவும் சிறப்பானதாக ஆக்கியுள்ளீர்கள். பல கேக்குகள் மற்றும் பரிசுகளை தந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள்.

நீங்கள் தான் எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறீர்கள். என் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார்.

  
View this post on Instagram

 

A post shared by Rekha Angelina (@rekhaangelina)


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: