ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தற்போது தனிமையில் தான் வாழ்கிறேன், இருந்தாலும்... சீரியல் நடிகை ரச்சித்தா ஓப்பன் டாக்!

தற்போது தனிமையில் தான் வாழ்கிறேன், இருந்தாலும்... சீரியல் நடிகை ரச்சித்தா ஓப்பன் டாக்!

Actor Rachcidha | தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், இருந்தாலும் சீரியலில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் தன்னிடம் இருப்பதாகவும் நடிகை ரச்சித்தா கூறியுள்ளார்.

Actor Rachcidha | தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், இருந்தாலும் சீரியலில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் தன்னிடம் இருப்பதாகவும் நடிகை ரச்சித்தா கூறியுள்ளார்.

Actor Rachcidha | தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், இருந்தாலும் சீரியலில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் தன்னிடம் இருப்பதாகவும் நடிகை ரச்சித்தா கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களையும் அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். சினிமா நடிகர்களின் கையில் நாட்டை ஒப்படைப்பது தொடங்கி சினிமா நடிகைக்கு விவாகரத்தானால், தன் சொந்த அக்காவின் அல்லது தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியானது போல வருத்தப்படுவது வரை (ஒன்ஸ் மோர்!) தமிழக மக்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!

இந்த விஷயத்தில் மக்களை குறை கூற முடியாது; ஏனெனில் எது அடிக்கடி, அதிகமாக ஊட்டப்படுகிறதோ, அதைத்தானே அவர்களும்- வேறு வழி இல்லமால் - விரும்பி சாப்பிடுவார்கள். "இந்த முக்கியத்துவம்" சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல டிவி சீரியல் நடிகர்களுக்கும் தான். வெள்ளித்திரை வட்டாரங்களில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து மேட்டர்கள் ஓய்ந்தபாடில்லை; அதேபோல சின்னத்திரையில், ரச்சித்தா - தினேஷ் ஆகியோரின் இடையேயான விரிசல் பற்றிய பேச்சுக்கள் ஓய்ந்த பாடில்லை!

தெலுங்கு மற்றும் கன்னட டிவி சீரியல்களின் வழியாக அறிமுகமான ரச்சித்தா, 2011 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் வழியாக தமிழ் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்த ரச்சிதாவின் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும் அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழிலும் சரளமாக பேசக்கூடியவராக திகழ்ந்தார். இதனாலேயே இவருக்கு பல மொழி டிவி சீரியல்களில் / நிகழ்ச்சிகளில், நடிக்கும் / பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.

Read More : 'தோனி ஸ்டைலில் வேலை செய்யணும்...' - அஜித் படத்தை இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் பதில்

தமிழில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்து இருந்தாலும் கூட, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் 'மீனாட்சி' என்கிற முக்கிய வேடத்தில் நடித்த பிறகே ரச்சித்தா மிகவும் பிரபலமடைந்தார். தான் நடித்த முதல் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகர் ஆன தினேஷ் கோபால்சாமி என்பவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ரீல் டூ ரியல் லைஃப் ஜோடியான இவர்களின் திருமண வாழ்க்கை சமீப காலம் வரை நன்றாகவே இருந்தது. இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, ரச்சித்தாவும் நவீனும் தற்போது பிரிந்து, தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகிறார்கள்.

போதாகுறைக்கு விஜய் டிவியில், தான் நடித்து வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்தும் விலகி கொண்டார். ஏனெனில் ரச்சித்தாவிற்கு கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பிட்ட கலர்ஸ் தமிழ் சீரியலில் கணவனை இழந்து ஒரு மனைவியாக, இரண்டு பிள்ளைகளை தனிந்தனியாக வளர்க்கும் ஒரு தாயாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ரச்சித்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், இது சொல்ல மறந்த கதை சீரியலில் உள்ள தன் கதாபாத்திரமும் தனது சொந்த வாழ்க்கையும் ஓரளவு ஒற்றுப்போவதாக கூறி உள்ளார். தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், இருந்தாலும் சீரியலில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Rachitha Mahalakshmi, Trending, Viral