Home /News /entertainment /

ஒளிவு மறைவு பிடிக்காது, வெளிப்படையாக இருக்க வேண்டும் - நிஷா கணேஷின் மனம் திறந்த பேட்டி!

ஒளிவு மறைவு பிடிக்காது, வெளிப்படையாக இருக்க வேண்டும் - நிஷா கணேஷின் மனம் திறந்த பேட்டி!

நிஷா கணேஷ்

நிஷா கணேஷ்

Actress Nisha Ganesh | 16 வயதிலேயே ஆங்கரிங் வேலையைத் தொடங்கிய நிஷா, கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த அனுபவம் மிகவும் ஜாலியாக இருந்தது என்று தெரிவித்தார். அதே போல, தலையணைப் பூக்கள் தொடர் தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

மேலும் படிக்கவும் ...
சின்னத்திரை பிரபலங்களில் சிலர், அவ்வப்போது இடைவெளி எடுத்து கொண்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் பன்முகக் கலைஞரான நிஷா கணேஷ். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவியும், பிரபல விஜே மற்றும் சீரியல் நடிகையுமான நிஷா கணேஷ் சமீபத்தில் தன்னுடைய கணவர், சீரியல் இடைவெளி, தோழி என்று மனம் திறந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

விஜய் டிவி-யின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் திவ்யா என்ற கேரக்டர் மூலம் நிஷா கணேஷ் முதல் முதலாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து வள்ளி,தெய்வமகள், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஜீ தமிழின் தலையணை பூக்கள் மூலம் பெரிய அளவுக்கு ரசிகர்களைப் பெற்றார்.

இவர் சீரியல் நடிகை மட்டும்மல்ல, திறமையான தொகுப்பாளரும் கூட. சூரிய வணக்கம், கிச்சன் கலாட்டா, வேந்தர் வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி உள்ளார். பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் நிஷாவின் கணவர் கணேஷ். அதில் இருந்து கணேஷ் மற்றும் நிஷா தம்பதி மிகவும் பிரபலமானார்கள். இது மட்டுமின்றி இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன், வில் அம்பு, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தோன்றி உள்ளார். இடைவெளி எடுத்துக் கொள்ளும் முன்பு, நிஷா கணேஷ் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்தார்.16 வயதிலேயே ஆங்கரிங் வேலையைத் தொடங்கிய நிஷா, கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த அனுபவம் மிகவும் ஜாலியாக இருந்தது என்று தெரிவித்தார். அதே போல, தலையணைப் பூக்கள் தொடர் தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

எந்த விஷயத்திலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகிறார் நிஷா. மறைத்து வைப்பது, பொய் சொல்வது, ஜாடை பேசுவது இதெல்லாம் பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

Also Read : சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!

கர்ப்பமாக இருக்கும் பொழுது ஜெயா டிவியில், ஜெயா சிங்கர் நிகழ்ச்சியை சைந்தவியுடன் தொகுத்து வழங்கினார். அப்போது இருவருக்கும் நல்ல நட்பு உருவானது. அந்த நட்பு இன்னும் நீடிக்கிறது என்றும் தன்னுடைய நெருங்கிய தோழி சைந்தவி என்றும் நிஷா கணேஷ் தெரிவித்துள்ளார். தன் காதல் கணவர் மட்டுமல்லாமல் கணவரின் குடும்பத்தாரும் மிகவும் அன்பானவர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இவர்களின் அன்புக்கும் காதலுக்கும் இடையில் மிகப் பெரிய பாலமாக இருப்பது வெளிப்படைத்தன்மை தான். ‘என் கணவர் என்னை எவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றால் என் அம்மா வீட்டில் சண்டை போட்டால் கணவர் வீட்டுக்கு ஓடி வந்து விடுவேன்’ என்று கூறினார்.

Also Read : ஒயின் ஷாப்பில் பாட்டில் பாட்டிலாக மதுபானம் வாங்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகை!

குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத காரணத்தால் சீரியலில் நடிப்பதைப் பற்றி யோசிக்கிறார் என்றும், விரைவில் மீண்டும் சீரியலில் நடிக்க வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Actress, Anchor Nisha, Entertainment

அடுத்த செய்தி