டேமேஜ் ஆன பீசு நானே.. ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்.. பூவே பூச்சூடவா சீரியல் நடிகையின் வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ

கிருத்திகா லட்டு

பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கிருத்திகா உடல் எடை குறைத்தது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
பிரபல தமிழ் டிவி சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை கிருத்திகா லட்டு . நடிகை கிருத்திகா லட்டு முக்கியமாக தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார். இவர் 1988-ம் ஆண்டு நவம்பர் 27-ல் சென்னையில் பிறந்தவர் ஆவார். சின்னத்திரையில் பாராட்டுக்குரிய தனது நடிப்பால் தமிழ் டிவி ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். சன் டிவி-யின் ஃபேவரைட் டைரக்டர்களில் ஒருவரான திருமுருகன் தயாரித்து இயக்கிய "தேன் நிலவு"சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் மீனு குட்டி (மீனாட்சி) என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளார்.

பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியின் மூத்த சகோதரியாகவும், சுந்தரின் மனைவியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை கிருத்திகா. சன் டிவியில் ஜனவரி 2012 முதல் செப்டம்பர் 2017 வரை ஒளிபரப்பான அமானுஷ்யம் மற்றும் மர்மம் நிறைந்த சீரியல் பைரவி- ஆவிகளுக்கு பிரியமானவள். இந்த சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. பொன்னுஞ்சல் சீரியல் மற்றும் செலிபிரெட்டி கிச்சன் ஷோ உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றுள்ளார். ராஜ் டிவி-யின் ஹலோ ஷியாமளா சீரியலிலும் நடித்துள்ளார். தவிர இவர் வெள்ளித்திரையில் நடித்துள்ளார். தமிழ் திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சென்னை 28 திரைப்படத்தின் செகண்ட் பார்ட்டான “Chennai 28 II-வில் நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடிகை கிருத்திகா லட்டு நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆடிஷன் வழியாக தேர்வு நடிகை கிருத்திகா செய்யப்பட்டார். இது இவரது முதல் வெள்ளித்திரை பயணமாகும். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிருத்திகா லட்டு, சமீபத்தில் இன்ஸ்டாவில் தனது கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில ஃபோட்டோக்களுடன், தான் இப்போது இருக்கும் ஸ்டைலிஷ் லுக்குடன் கூடிய ஃபோட்டோக்களையும் இணைத்து ஒரு வீடியோவாக தயாரித்து "ஜோக்கர் இப்போ ஹீரோயின் ஆன தருணம்" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Also read : உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா! நடிகை ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் போட்டோஸ்

வீடியோவின் பேக்ரவுண்டில் இசையமைப்பாளர் அனிருத் குரலில் டேமேஜான பீஸு நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் பாடலை ஒலிக்க செய்துள்ளார். உண்மையில் அந்த வீடியோவில் முதலில் தோன்றுவது நடிகை கிருத்திகா தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதிக எடையில் காணப்படும் அவர் வேறு யாரோ மாதிரி தோற்றமளிக்கிறார். எந்த நேரத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள், குறிக்கோள் மற்றும் கனவுகளை பின்பற்றி போய் கொண்டே இருங்கள் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டு கொண்டு உள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Krithikaa Laddu ☺ (@krithikaaladdu)

மிகவும் குண்டாக தான் இருந்த நேரத்தில் கர்ப்பமாகி இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அதன் மறுபிறப்பை நான் அறிவேன், எனவே நான் புதிதாக மீண்டும் உருவாகினேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த வீடியோவில் சேர்த்துள்ளேன். ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் குண்டான எனது தோற்றம் அடங்கிய புகைப்படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்க விரும்புகிறீர்கள்?என்று கேப்ஷனில் கேள்வி எழுப்பி உள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Krithikaa Laddu ☺ (@krithikaaladdu)

மறக்க முடியாத நினைவுகள் என்று சொன்னால் என் வாழ்க்கையில் இதுவும் தான் ஏனென்றால் என்னை தற்போது இருக்கும் உருவத்தில் மாற்றிக் கொள்ள எவ்வளவு கடினமான பயணம் செய்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். உடல் எடை காரணமாக அதிக மனஅழுத்தம், அதிக கிண்டலை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் கூறி உள்ளார். ஓ மை காட், போதும் டா சாமி என்று தனது விளக்கத்தை முடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: