Home /News /entertainment /

‘கண்மணி’ சீரியல் நடிகை ஐரா அகர்வாலுக்குள் இப்படியொரு திறமையா? அவரே சொன்ன செய்தி! 

‘கண்மணி’ சீரியல் நடிகை ஐரா அகர்வாலுக்குள் இப்படியொரு திறமையா? அவரே சொன்ன செய்தி! 

iraa agarwal

iraa agarwal

Iraa Agarwal | சின்னத்திரை, மாடலிங், விளம்பரம் என கலந்து கட்டி கலக்கி வரும் ஐரா அகர்வால், மற்றொரு துறையிலும் வல்லவராம். ஆம், விளையாட்டுத்துறையில், குறிப்பாக குத்துச்சண்டை வீராங்கனையாம்.

சின்னத்திரையில் இளம் நடிகையாக கலக்கி வருபவர் ஐரா அகர்வால், பக்கா சென்னைக்கார பெண். 2015ம் ஆண்டு நடந்த Miss South India fashion pageant போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. தெலுங்கில் ‘வாடு வீடு கல்பனா’ என்ற படம் மூலமாக 2016ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018ம் ஆண்டு தமிழில் அறிமுகமான ஐரா அகர்வால், ‘காட்டு பய சார் இந்த காளி’, ‘தாயம்’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

வெள்ளித்திரையில் பெரிதாக ஹிட் அடிக்க முடியாததால் சின்னத்திரைக்கு தாவினார். சன் டிவியின் கங்கா சீரியலில் மஹிமா என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் 2018ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ சீரியலில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய் டி.வி.யில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியலில் இருந்து ஷிவானி நாரயணன் திடீரென விலகிக்கொள்ள, ஐரா அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அந்த சீரியலில் மீனாக்ஷி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது, உடனடியாக ஐரா அகர்வாலும் ஜீ தமிழுக்கு மாறிவிட்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜமகள் சீரியலில் துளசி கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாகியிருக்கும் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற சீரியலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரை, மாடலிங், விளம்பரம் என கலந்து கட்டி கலக்கி வரும் ஐரா அகர்வால், மற்றொரு துறையிலும் வல்லவராம். ஆம், விளையாட்டுத்துறையில், குறிப்பாக குத்துச்சண்டை வீராங்கனையாம். சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து வருகிறார். பேட்டி ஒன்றில் தனது பாக்ஸிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள ஐரா அகர்வால், பாக்ஸிங் எனது வாழ்க்கை, நடிப்பு எனது காதல், இரண்டும் இரு கண்கள் மாதிரி எனத் தெரிவித்துள்ளார். தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 7 மணி வரை இடைவிடாது பாக்ஸிங் பயிற்சி எடுத்துக்கொள்வாராம். அதை முடித்துவிட்டு தான் ஷூட்டிங்கிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளராம். மேலும் பாக்ஸிங்கில் சாம்பியன் ஷிப் ஜெயிக்க வேண்டும் என்பதே ஐராவின் நீண்ட கால ஆசை என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by iraa agarwal (@iraaagarwal_official)






சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருந்து வரும் ஐரா அகர்வால், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பாக்ஸிங் பயிற்சி வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, TV actress

அடுத்த செய்தி