’நெகடிவ்’ கமெண்ட் கொடுத்த ரசிகர்களை Block செய்த சீரியல் நடிகை!

ஸ்ரீதேவி

சீரியல் நடிகையான ஸ்ரீதேவி, தன் மீது அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இன்ஸ்டாகிராமில் நெகடிவ் கமெண்ட் கொடுப்பவர்களை பிளாக் செய்து வருகிறார்.

  • Share this:
2003ம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு திரும்பினார். 2007 ஆம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, விஜய் டிவியில் ஹிட்டான ராஜா ராணி 1 சீரியலில் கடைசியாக வில்லியாக அசத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தான் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். திருமணமானது முதல் தாய்மை அடைந்தது வரை ஒவ்வொரு முக்கிய நிகழ்வையும் புகைப்படமாக எடுக்கும் அவர், தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்கிறார். ஆனால், அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிராதீர்கள் கண்ணுபட்டுவிடும் போன்ற நெகடிவ் கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

வளைகாப்பு புகைப்படங்களை பகிரும்போது அதே கமெண்டுகள் தொடர்ந்ததால் கடுப்பான ஸ்ரீதேவி, அத்தகைய கமெண்டுகள் கொடுப்பவர்களை பிளாக் செய்யத் தொடங்கினார். தற்போது குழந்தை பிறந்திருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போது குழந்தை புகைப்படத்தை பகிர வேண்டாம் என சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். இதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய விளக்கம் ஒன்றை அளித்துள்ள ஸ்ரீதேவி, திருமண புகைப்படத்தை பகிரும்போது இதே கமெண்டுகள் வந்தது, அவர்களை பிளாக் செய்துவிட்டேன்.

Also read : இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற சஞ்சீவ் - ரசிகர்கள் வாழ்த்து!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என கூறியவர்களையும் பிளாக் செய்துவிட்டேன். ஹேப்பியாக இருக்கும் இமேஜ்களை பகிர வேண்டாம் என கூறியவர்களையும் பிளாக் செய்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர், கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அவர்களையும் பிளாக் செய்துவிட்டேன்.

தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளை பதிவு செய்பவர்களை பிளாக் செய்து வருகிறேன். அதேபோல் தற்போதும் யாராவது நெகடிவ் கமெண்ட் கொடுத்தால் நிச்சயம் பிளாக் செய்வேன். அதற்கு முன்பு நீங்களே போய்விடுங்கள் என கூறியுள்ளார். ஸ்ரீதேவி, வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். ஸ்ரீதேவியின் இந்த நேரடியான பதிலடியையும் பலர் ரசித்துள்ளனர். மேலும், புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கும், ஸ்ரீதேவி தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: