இளையராஜா இசையில் புதுப்படத்தில் கமீட் ஆன சீரியல் நடிகர் பிரஜின்...

பிரஜின்

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பிரஜின், தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

  • Share this:
நடிகர் பிரஜின் பத்மநாபன், சின்னத்திரை மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். பல ஆண்டுகளுக்கு முன்பே சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாராக அறிமுகமாகி, அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர். தொலைக்காட்சி இசைத்தொகுப்பு தொகுப்பாளாராக அறிமுகமான பிரஜின், துணை நடிகராக, ஜீவா நடித்த டிஷ்யூம் திரைப்படத்தில், வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

நிகழ்ச்சி தொகுப்பாளாராக தொடங்கிய தனது பயணத்தை, தமிழ் திரைப்படத் துறையில் தொடர்ந்தார். ஆண் தேவதை, பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரஜின், எதிர்பார்த்த படி வெற்றிகள் கிடைக்கவில்லை. தமிழ் படங்கள் மட்டுமின்றி, இவர் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, திரைத்துறை வாய்ப்புகள் சரியான முறையில் அமையாத நேரத்தில், சீரியலில் நடிக்கத் தொடங்கினார். காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மாபெரும் புகழ் வெளிச்சத்தில் இருந்தவர், நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற ரீதயில், இடையில் மீண்டும் ஒரு சறுக்கல். இடையில், மலையாள சேனலில் தொகுப்பாளாராக பணியாற்றிய சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார்.

சாண்ட்ராவும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் சின்னத்திரையில் விஜய் தொலைகாட்சியின் சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்தார். இந்த சீரியல் மூலம், மறுபடி பிரபலமானார் பிரஜின். சீரியலும் மிகப்பெரிய ஹிட்.




அப்பாவியான கிராமத்து இளைஞனாக நடித்த பிரஜினை அனைத்து இல்லங்களிலும் கொண்டாடினர். இவருக்கென்று மீண்டும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. இடையில், ஆண் தேவதை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். சின்னத்தம்பி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, அன்புடன் குஷி என்ற விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.

Photos : கவர்ச்சியான சிலீவ் லெஸ் உடையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா- புகைப்படங்கள்

ஆண் தேவதை திரைப்படத்திற்கு பிறகு, மூன்று ஆண்டுகள் இடைவெளியில் இருந்தார். தற்போது, மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் விவரங்களை, பட பூஜையின் புகைப்படத்தோடு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

திரைப்படத்தின் பெயர் ‘நினைவெல்லாம் நீயடா’ என்றும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி, இப்படத்தில், ஒரு கல் ஒரு கண்ணாடி புகழ் மதுமிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: