எங்க "அபி டெய்லர்" சீரியலுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. இன்ஸ்டாவில் பதிவிட்ட மதன் பாண்டியன்!

அபி டெய்லர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 19ம் தேதி ஒளிபரப்பாக உள்ள "அபி டெய்லர்" சீரியலுக்கு சப்போர்ட் செய்யுமாறு மதன்பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 19ம் தேதி ஒளிபரப்பாக உள்ள "அபி டெய்லர்" எனும் புத்தம் புதிய சீரியல் ரசிகர்கள் மத்தியில் எகோபத்திய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், அபி டெய்லர் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் மதன் பாண்டியன் தனது வரவிருக்கும் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது புது சீரியல் குறித்து உற்சாகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டா பதிவில் தனது சீரியலின் டீசரை பகிர்ந்த அவர், “தி பாஸி மோட்". மக்களே உங்கள் எல்லா அன்பும் எங்களுக்கு தேவை. எங்கள் புதிய தொடக்கத்திற்கு ஆதரவையும் மற்றும் வாழ்த்துக்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூலை 19ம் தேதி திங்கட்கிழமை முதல் அபிடெய்லர் தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று கூறியதோடு, லவ் யூ ஆல்" என்று பதிவிட்டுள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)


அவர் வெளியிட்ட அந்த ப்ரோமோ காட்சிகளில் தொடரின் முக்கிய கதாபாத்திரமானா அசோக்கை ஒரு கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் அறிமுகப்படுத்தியது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. ஜவுளித் துறையில் வெற்றிகரமான தொழிலதிபர் அசோக்கின் பாத்திரத்தை மதன் பாண்டியன் சித்தரித்துள்ளார்.

AlsoRead : ரஜினி போல ஸ்டைல் செய்து கெத்து காட்ட நினைத்து மேடையில் பல்பு வாங்கிய நபர் - வைரல் வீடியோ!

அசோக் (மதன்) தனது குறிக்கோள்களை அடைவதில் அதிக கவனம் செலுத்தும் ஒரு கண்டிப்பான முதலாளியாக இருப்பதை போல ப்ரோமோ காட்டுகிறது. டீஸரில், நிகழ்ச்சியின் கதைக்கு மேடை அமைக்கும் அபிராமி என்கிற அபி மற்றும் அசோக் ஆகிய இருவருக்கும் ஏற்படும் மோதலை பிரதிபலிக்கிறது இந்த ப்ரோமோ. இது கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அபி டெய்லர் சீரியலுக்கு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுகிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதேபோல ரேஷ்மா முரளிதரனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் சீரியலுக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். ரியல் வாழ்க்கையில் காதலித்து வரும் இந்த ஜோடிகள் அபி டெய்லர் நாடகத்திலும் ஜோடியாக களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் சக்தி சிவன் மற்றும் சுந்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், இருவரும் காதலித்து வருவதை ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

Photogallery : எம்மாடி..என்ன ஒரு அழகு ! அனேகன் பட நடிகையின் கவர்ச்சி போட்டோஸ்..

மேலும், முதல் சீரியலில் பெரிய வரவேற்பை பெற்ற இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது அதுவும் ஜோடியாக இணைவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.இதனால் இந்த சீரியல் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: