இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற சஞ்சீவ் - ரசிகர்கள் வாழ்த்து!

சஞ்சீவ்

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையின் பிரபல நடிகரான சஞ்சீவ் கார்த்திக், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

  • Share this:
சின்னத்திரையின் பிரபலமான நடிகரான சஞ்சீவ் கார்த்திக், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்படும் சஞ்சீவ் கார்த்திக் தற்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை கூறியுள்ளார்.

“1 மில்லியனுக்கு நன்றி. நான் தற்போது பிரைம் டைமில் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறேன். அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன். லவ் யூ ஆல்” என்று தன் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார்.

சஞ்சீவ் மட்டுமின்றி, அவரின் மனைவியான ஆல்யா மானசாவும் பிரபலமான சின்னத்திரை நடிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர். ராஜா ராணி சீரியல் மூலம் பரபரப்பாக பேசப்பட்டது, சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி, நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தது. இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சஞ்சீவும், ஆல்யாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வார்கள். இதற்காகவே, இவர்களுக்கு மிகப்பெரியர் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அது மட்டுமின்றி, தனித்தனியே ரசிகர் கணக்குகளும் இயங்குகின்றன.

Also read: விக்ரம் வேதா இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

ராஜா ராணி சீரியல் முடிந்தவுடன், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலேயே, காற்றின் மொழி என்ற மற்றொரு சீரியலில் கதாநாயகனாக நடித்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தால், படபிடிப்பு தடைபட்டு, மீண்டும் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், கடந்த ஏப்ரல் இரண்டாம் வாரம் முடிந்தது. சஞ்சீவ் கார்த்திக்கின் அடுத்த திட்டம் என்ன என்று ஆவலாக அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், விரைவில் தன்னுடைய அடுத்த திட்டங்கள் பற்றி தெரிவிப்பதாகக் கூறியிருந்தார் சஞ்சீவ் கார்த்திக். இந்நிலையில், 1 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்ற அதே நேரத்தில், தன்னுடைய அடுத்த சீரியல் பற்றியும் அறிவித்தார்.

Also Read : ’பாரதி கண்ணம்மா’வில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெண்பா சொன்ன அப்டேட்!

சஞ்சீவ் கார்த்திக் பகிர்ந்த தகவலின் படி, சஞ்சீவ் அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். விஜய் டிவியில் அறிமுகமாகி, அடுத்தடுத்து இரண்டு ஹிட் சீரியல் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ், முதல் முறையாக சன் டிவி சீரியலில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொலைகாட்சி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக், வெள்ளித்திரையில் முதலில் அறிமுகமானார். குளிர் 100 டிகிரி என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: