சீரியல் நடிகர் அவினாஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் வாழ்த்து!

அவினாஷ் அஷோக்

ஜூலை 17 ஆம் தேதி சின்னத்திரை நடிகர் அவினாஷ் அஷோக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  • Share this:
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தி சீரியல் புகழ் அவினாஷ் அஷோக் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அவினாஷின்  காதலி த்ரேசா மரியா ஜோசஃப், அவினாஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிறந்தநாளை கொண்டாட்டத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை நடிகர் அவினாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்படும். அதே போல, ஆனந்தி சீரியல் புகழ் அவினாஷ் பிறந்த நாள், கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அவினாஷின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், கஸ்டமைஸ் கேக்குகளை த்ரேசா மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில்‘ஹேப்பி பர்த்டே டு மீ’ என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அவினாஷ் அஷோக்.

 மேலும் அதில் என்னை புன்னகைக்க வைத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

இந்த புகைப்படங்களில், பிறந்த நாள் கொண்டாடிய அவினாஷ் அஷோக் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதைக் காட்டுகிறது. அவினாஷின் கேர்ள் ஃப்ரெண்ட் த்ரேசாவும், பிறந்த நாள் வாழ்த்தாக, “ஹேப்பி பர்த்டே மை லவ்” என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.மற்றும், அந்த கேக்கில், “அப்பு லவ்ஸ் அப்பு” என்று எழுதப்பட்டிருந்தது.

“எப்போதும் வாழ்வின் சந்தோஷங்களும், வெற்றியும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன். இப்போது இருப்பது போல, எப்போதும் போலவே சத்தமாக சிரித்துக் கொண்டு, கொஞ்சம் முட்டாளாகவும், இப்போது தொல்லை கொடுத்துக்கொண்டே இரு” என்று அன்போடும், கொஞ்சம் நகைச்சுவையாகவும் பதிவிட்டிருந்தார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி, அருண் குமார் ராஜன், கீதா சரஸ்வதி, தியா மேனன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவினாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தி சீரியலில் வருண் என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார் அவினாஷ் அஷோக். ஆனந்தி சீரியல், அவினாஷின் முதல் சீரியல் அல்ல. இதற்கு முன்பாகவே, சாக்லேட் சீரியலில் அனிருத் என்ற பாத்திரத்திலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் தொடரில் அரவிந்த் என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

 சின்னத்திரையில் நடிகராக மட்டுமின்றி, அவினாஷ் நல்ல டான்சராகவும் அறியப்பட்டுள்ளார். தன்னுடைய நடனத் திறமையை பல்வேறு நடன ரியாலிட்டி ஷோக்களிலும், போட்டிகளிலும் கலந்து கொண்டு வெளிக்காட்டியுள்ளார். அவற்றில், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0, ஓடி விளையாடு பாப்பா, லிட்டில் மாஸ்டர், டான்ஸ் கேரளா டான்ஸ் மற்றும் தில்லான தில்லானா ஆகியவை அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: