• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Senthoora Poove: செந்தூரப்பூவே சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் ஆவல்!

Senthoora Poove: செந்தூரப்பூவே சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் ஆவல்!

செந்தூரப்பூவே சீரியல்

செந்தூரப்பூவே சீரியல்

துரைசிங்கம் என்ற கேரக்டரில் ரஞ்சித் , அவருக்கு இரண்டாவது மனைவியாக ரோஜா என்ற கேரக்டரில் ஸ்ரீநிதி நடித்து வருகின்றனர்.

  • Share this:
திரைப்படங்களின் பெயரை வைத்து தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. குறிப்பாக அதிக சின்னத்திரை ரசிகர்களை கொண்ட விஜய் டிவி-யில் சினிமா படங்களின் டைட்டிலை வைத்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் சீரியல்களின் பட்டியலில் இணைந்துள்ளன. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்களின் வரிசையில் சினிமா டைட்டிலை கொண்டு ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் வெள்ளித்திரை நடிகரும், இயக்குனருமான ரஞ்சித் ஹீரோவாக நடித்து வருகிறார்.

துரைசிங்கம் என்ற கேரக்டரில் ரஞ்சித் , அவருக்கு இரண்டாவது மனைவியாக ரோஜா என்ற கேரக்டரில் ஸ்ரீநிதி நடித்து வருகின்றனர். நடிகர் ரஞ்சித் பொன்விலங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், சிந்து நதி பூவில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். பின்னர் மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார். 2003-ல் பீஷ்மர் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். பின்னர் மலையாள படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தோன்றி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே 1999-ல் திரைப்பட நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரியா ராமன் சூப்பர் ஸ்டார் நடித்த வள்ளி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். பின்னர் மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரை கல்யாணம் செய்து கொள்ளாமல் நிராகரிக்கும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் நினைவில் நின்றார்.

Also read... Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் ஷாக்!

நடிகர் ரஞ்சித் - நடிகை பிரயா ராமன் இடையிலான திருமண உறவு 2014-ல் முடிவுக்கு வந்தது. பிரிய ராமனை விவாகரத்து செய்து விட்டு ராகசுதா என்பவரை திருணம் செய்தார் ரஞ்சித். ஆனால் இந்த திருமணம் ஓராண்டிற்கு மேல் நீடிக்கவில்லை. இதனிடையே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் கலக்கி வரும் நடிகை பிரியா ராமன், விஜய் டிவி சீரியலான செம்பருத்தியில் பிளாஷ்பேக் சீனில் அருணா என்ற கேரக்டரில் ரஞ்சித்துடன் தோன்றுகிறார். இது தொடர்பான ப்ரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.



அதில் ரோஜா, துரை சாரும் அருணா அக்காவும் (கதைப்படி துரையின் முதல் மனைவி) சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருப்பதாக கேட்கிறார். அதனை தொடர்ந்து ஓடும் பிளாஷ்பேக்கில் பிரியா ராமனிடம் கோவிலில் சில ரவுடிகள் வம்பிழுப்பது போலவும், அங்கே வரும் ரஞ்சித் ரவுடிகளை புரட்டி எடுத்து பிரியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது போலவுமான சீன்கள் இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பின் நிஜ வாழ்வில் இணைந்த இந்த ஜோடி, தற்போது சீரியலிலும் ஜோடி சேர்ந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: