சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்

news18
Updated: July 15, 2018, 9:46 PM IST
சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்
news18
Updated: July 15, 2018, 9:46 PM IST
விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் இடத்தை மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ் வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் இடத்தை பிடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் விரைவில் பாட இருக்கிறார்.

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6  சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பெரும்பாலும் திரையிசை பாடல் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர். இந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே பலத்த வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது.

இறுதிப் போட்டி வரை முன்னேறிய செந்தில் கணேஷ் கடைசி பாடலாக `தாண்டவகோனே’  பாடலை பாடினார். வாக்களிப்பு முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் செந்தில் கணேஷ் முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை ரக்‌ஷிதா பிடித்துள்ளார். நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் முதல் இடத்தை பிடித்து சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டத்தை பெற்றது நாட்டுப்புற கலைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
First published: July 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்