என்னிடம் காமெடி நடிகர் தவறாக நடந்துகொண்டார் - நடிகை பிரகதி அதிரடி குற்றச்சாட்டு..!
அந்தக் காமெடி நடிகரின் பெயரை பிரகதி வெளியில் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரகதி
- News18 Tamil
- Last Updated: May 6, 2020, 3:08 PM IST
படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை பிரகதி கூறியுள்ளார்.
1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் பிரகதி நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக பிரகதி தன் மகனுடன் ஆடிய நடனம் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை பிரகதி, படப்பிடிப்பு தளத்தில் காலை வேளையில் என்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்தார். நான் அங்கிருந்த அனைவரது முன்னிலையிலும் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. மாலையில் அவரை எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். நான் உங்களிடம் அவ்வாறு தவறாக நடக்க ஏதாவது சமிஞ்கை கொடுத்தேனா, அல்லது என் உடல்மொழி உங்களுக்கு என்னிடம் அப்படிக் கேட்க தோன்றியதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றார். நீங்கள் செய்தது தவறு மிக மலிவான செயல். ஏற்றுக் கொள்ள முடியாதது என்றேன்.
உங்களை நான் நினைத்திருந்தால் எல்லோரது முன்னிலையிலும் அசிங்கப்படுத்தியிருக்க முடியும். ஆனால் உங்கள் இமேஜை கருத்தில் கொண்டுதான் இதை இப்போது சொல்கிறேன்” இவ்வாறு அந்தக் காமெடி நடிகரை எச்சரித்ததாக நடிகை பிரகதி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தக் காமெடி நடிகரின் பெயரை பிரகதி வெளியில் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் பிரகதி நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக பிரகதி தன் மகனுடன் ஆடிய நடனம் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை பிரகதி, படப்பிடிப்பு தளத்தில் காலை வேளையில் என்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்தார்.