செம்பருத்தி சீரியலில் கார்த்திக்கு பதிலாக நடிப்பவர் இவர் தான் - வெளியானது புதிய அறிவிப்பு

செம்பருத்தி சீரியலில் கார்த்திக்கு பதிலாக நடிப்பவர் இவர் தான் - வெளியானது புதிய அறிவிப்பு

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியலில் நடிகர் கார்த்திக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் முன்னணி தொடர்களில் ஒன்று ‘செம்பருத்தி’. நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.

சமீபத்தில் இத்தொடரில் நடித்திருந்த ஜனனி அசோக் குமார் திடீரென தான் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி யூடியூப் லைவ்வில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தொடரின் நாயகனாக நடித்துவரும் கார்த்திக் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஒளிபரப்பான எபிசோட்களில் கார்த்திக் ராஜ் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களே இடம்பெற்றிருந்தன. இதனால் என்ன ஆனார் கார்த்திக் ராஜ் மீண்டும் எப்போது வருவார் என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்களிடம் எழுந்தன.

இந்நிலையில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து கார்த்திக்கின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

பல்வேறு இணைய ஊடகங்களில் திரைபிரபலங்களை பேட்டி கண்ட தொகுப்பாளர் அக்னி கார்த்திக் நடித்த ஆதிக்கடவூர் ஆதித்யாவாக செம்பருத்தி சீரியலில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Agni (@agninatchathiram)


இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டிருக்கும் அக்னி, கார்த்திக் சிறப்பாக செய்த கேரக்டரை விதி என்னிடம் இப்போது கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த தொடரில் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இது நான் யோசித்த எடுத்த முடிவுதான். எனவே வெற்றி தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: