Home /News /entertainment /

ஒரே சீரியலில் 2 ஹீரோயின்.. ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் அடுத்த திருப்பம்!

ஒரே சீரியலில் 2 ஹீரோயின்.. ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் அடுத்த திருப்பம்!

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி பார்வதி மற்றும் நடிகை ஆயிஷா ஆகிய இருவரும் இணைந்து செய்த இன்ஸ்டா ரீல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    தமிழ் டிவி சேனல்கள் மத்தியில் சிறந்த சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் கடந்த பல ஆண்டுகளாக பெரும் போட்டி நிலவி வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பல தமிழ் சேனல்கள் சிறந்த கதைகளம் கொண்ட சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து தங்களது TRP ரேட்டிங்கை ஏற்றி கொள்கின்றன. TRP ரேட்டிங் குறைந்தால் அதற்கேற்ப குறிப்பிட்ட வார எபிசோட்களில் கூடுதலாக சில சுவாரஸ்யங்களை சேர்கின்றன.

    முன்பை போல பெண்களை மட்டும் டார்கெட் செய்யாமல் அனைத்து வயதினரையும் கவருவது போலவே சீரியல்கள் எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு மக்கள் மத்தியில் பல வருடங்களாகவே அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள் டிவி சேனல்களை ஆக்கிரமித்து உள்ளன. ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி.

    இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது 1200-க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி இருக்கிறது சூப்பர் ஹிட் சீரியலான செம்பருத்தி. இந்த சீரியலில் நடிகை ப்ரியா ராமன், அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக விஜே அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர்.

    இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். இவருக்கும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஆர்யனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. திருமண வாழ்வை சில வாரங்கள் என்ஜாய் செய்து விட்டு இருவரும்  சீரியல்களுக்கு சமீபத்தில் தான் திரும்பினர்.

    இதே ஜீ தமிழ் சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சத்யா சீரியல் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், சத்யா 2 என்ற பெயரில் தற்போது புதிய கதைக்களத்துடன் இந்த சீரியலின் அடுத்த சீசன் ஒளிபரப்பாக துவங்கி இருக்கிறது. சத்யா 2-வில் சீசன் 1-ல் நடித்த நடிகை ஆயிஷாவே தொடர்கிறார். ஆனால் சத்யா 2-வில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதனிடையே நடிகை ஷபானா ஆர்யன் மற்றும் நடிகை ஆயிஷா ஆகிய இருவரும் இணைந்து செய்த இன்ஸ்டா ரீல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    இதனை தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவு பெற்ற செம்பருத்தி மற்றும் சத்யா 2 சீரியல்களின் மெகாசங்கமம் விரைவில் இருக்குமோ என்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிரிபார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. செம்பருத்தி சீரியலிலும் ரசிகர்களை மேலும் கவர பல புதுமைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் சத்யா 2 மற்றும் செம்பருத்தி இந்த 2 சீரியல்களும் இணைந்தால் நிச்சயம் விருந்தாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை சோஷியல் மீடியாக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sembaruthi Serial, Zee tamil

    அடுத்த செய்தி