• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கத்திரி பூவழகி ! சேலையில் கலக்கும் சீரியல் நடிகை ஷபானா..

கத்திரி பூவழகி ! சேலையில் கலக்கும் சீரியல் நடிகை ஷபானா..

சீரியல் நடிகை ஷபானா

சீரியல் நடிகை ஷபானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் நடிகை ஷபானா சேலையில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
மும்பையை சேர்ந்த நடிகை ஷபானா ஷாஜஹான் தமிழ், மலையாள சின்னத்திரையில் முன்னிலை வகிக்கிறார். மும்பையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் படித்த இவர், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

தனது நடிப்பு திறமையால் எண்ணற்ற விருதுகளையும் வாங்கி குவித்தார். Behindwoods விருது, ஆனந்த விகடன் விருது, கலாட்டா நட்சத்திர விருது, விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி என்ற பிரிவில் தொடர்ந்து மூன்று முறை ஜீ தமிழ் குடும்பம் விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர். சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும், தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து அழகாக புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 607k பேர் பாலோ செய்கிறார்கள்.

Also Read: 45 வயதில் உடற்பயிற்சி செய்யும் நடிகை பிரகதி - விமர்சனங்களுக்கு பதிலடி

கடந்த சில நாட்களாக சேலையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது மாடர்ன் உடையிலும், தனது ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது.குறிப்பாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ், நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், தொடந்து கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டே இருந்தது.

Also Read: அடேங்கப்பா! இரு மொழிகளில் நடிக்க 25 கோடி சம்பளமா.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன், “ஷபானா.. இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என நடிகை ஷபானாவின் ப்ரொபைல்-ஐ டேக் செய்து கேட்டிருந்தார். இதனை தன் பக்கத்தில் பகிர்ந்த ஷபானா, பதில் ஏதும் சொல்லாமல் ‘மைன்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது. இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது செம்பருத்தி சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் பிரியா ராமன் வில்லி கதாப்பாத்திரமான அகிலா என்ற பெயரில், மிரட்டுகிறார். செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதற்கு நடிகை ஷபானா ஷாஜஹான் மற்றும் வில்லியாக பிரியா ராமன் அசத்தி வருவது முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: