Sembaruthi Serial : செம்பருத்தி சீரியலில் மீண்டும் இணைந்த நடிகர் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

செம்பருத்தி

முன்னதாக செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் கார்த்திக் ராஜ் நடித்தார். செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய துணை நடிகை ஒருவர் ஹீரோ கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், சில நாட்களிலேயே செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் திடீரென காத்திக் நீக்கப்பட்டார்.

  • Share this:
தமிழகத்தில் நாள்தோறும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே பெண்கள் மட்டுமே பார்ப்பது என்ற நிலை மாறி, இன்று அனைத்து வயதினரும் ஆர்வமுடன் தங்களுக்கு விருப்பமான சீரியல்களை பார்த்து மகிழும் நிலை உள்ளது.

இந்நிலையில் தமிழ் டிவி சேனல்களில் தற்போது பிரபலமாக இருக்கும் ஜீ தமிழ் சேனலில், கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் செம்பருத்தி. ஜீ தமிழில் ஏராளமான சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் அமோக வரவேற்பு மற்றும் ஆதரவு காரணமாக, தமிழ் டிவி சேனல்களில் தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி இருக்கிறது. கிராமத்தில் இருந்து வந்து பணக்கார வீடு ஒன்றில் பணி பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாக ஆகும் ஒரு பெண் மற்றும் அவளை சுற்றி நடக்கும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ALSO READ |  4 தலைமுறை குடும்பப் படத்தை வெளியிட்ட இன்பன் உதயநிதி!

பணக்கார பெண்மணியான அகிலாண்டேஸ்வரி (ப்ரியா ராமன்) என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதித்யா, பார்வதி (ஷபானா) என்ற பணிப்பெண் பெண் மீது கொண்ட காதலினால் ஏற்படும் திருப்பங்களும், அவர்களுக்கு இடையேயான காதல் நிகழ்வுகளும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஜீ தமிழ் சேனலின் டிஆர்பி ரேட்டிங் எகிறி காணப்படும். இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலையே தாய்மார்கள் மற்றும் பெண்கள் மிகவும் விரும்பி பார்த்து வரவேற்பு அளிப்பதே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக விஜய் டிவி புகழ் கார்த்திக் ராஜ் நடித்தார். செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய துணை நடிகை ஒருவர் ஹீரோ கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், சில நாட்களிலேயே செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் திடீரென காத்திக் நீக்கப்பட்டார். பின்னர் தான் யூடியூப் சேனலில் விஜே வாக வேலை செய்த அக்னி செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக இணைந்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தற்போது சீரியல் ஷூட்டிங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து செம்பருத்தி சீரியலின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நடத்தி வருகிறது ஜீ நிறுவனம்.

ALSO READ |   'தி பேமிலி மேன் சீஸன் 2 விமர்சனம்' - எழுத்தாளர் விநாயக முருகன்

சீரியலில் இருந்து கார்த்தி விலகியதில் இருந்து செம்பருத்தி சீரியலின் டிஆர்பி ரேட்டிங் சற்று சறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிந்த ரேட்டிங்கை தூக்கி நிறுத்தும் முயற்சியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த அழகப்பன் மீண்டும் சீரியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.



ஹைதராபாத் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானாவுடன், நடிகர் அழகப்பன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. காமெடி காட்சிகளில் நன்றாக நடிக்க கூடிய அழகப்பன் மீண்டும் சீரியலுக்கு திரும்பி இருப்பது செம்பருத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: