பிறந்து 8 நாட்களே ஆன தனது குழந்தையை செல்லம் கொஞ்சும் செல்வராகவன் - வீடியோ

செல்வராகவன்

செல்வராகவன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை அவரது மனைவி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இத்தம்பதிக்கு 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயரிட்டிருப்பதாக கீதாஞ்சலி தெரிவித்திருந்தார்.

புதிதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த கீதாஞ்சலி முதல்முறையாக செல்வராகவன் உடன் ரிஷிகேஷ் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிறந்து 8 நாட்களே பிஞ்சுக் குழந்தையின் விரலைப் பற்றியபடி இருக்கிறார் செல்வராகவன். மேலும் அந்த பதிவில், “எங்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசு. ரிஷிகேஷ் உடன் தன்னுடைய விடுமுறை நாட்களை செலவிட்டு வருகிறார் தந்தை செல்வராகவன்” என்று குறிப்பிட்டுள்ளார் கீதாஞ்சலி.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: