கீதாஞ்சலி செல்வராகவனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை... பேர் கூட வச்சிட்டாங்க!

கீதாஞ்சலி செல்வராகவனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை... பேர் கூட வச்சிட்டாங்க!

செல்வராகவன் - கீதாஞ்சலி

குழந்தை நலமாக இருப்பதாகவும், குழந்தைக்கு 'ரிஷிகேஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் கீதாஞ்சலி.

  • Share this:
இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு மூன்றாவதாக மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டிருப்பவர் இயக்குநர் செல்வராகவன். இவர் கீதாஞ்சலியை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஓம்கார் என்ற மகனும் லீலாவதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தற்போது மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். மீண்டும் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் கீதாஞ்சலி.
இந்த செய்தியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி, குழந்தை நலமாக இருப்பதாகவும், குழந்தைக்கு 'ரிஷிகேஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தனுஷ் நடிக்கும் தனது 12-வது படத்தின் பணிகளை தொடங்கி விட்டார் செல்வராகவன். புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: