தனுஷ் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்த செல்வராகவன்

செல்வராகவன் - யுவன் - தனுஷ்

செல்வராகவன் - தனுஷ் - யுவன் மூவரும் இறுதியாக புதுப்பேட்டை படத்தில் ஒன்றாக பணிபுரிந்து இருந்தனர்.

 • Share this:
  செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் புதிய பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

  தனது தனித்துவமான படைப்பாற்றலால், தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தை பிடித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இவர் தனது தம்பி தனுஷுடன் இணைந்து பணியாற்றிய, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர்ராஜா கூட்டணி மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் போட்டோஷூட் இன்று தொடங்கியிருக்கும் நிலையில் 'மீண்டும் எனது உலகிற்கு திரும்பிவிட்டேன்' என செல்வராகவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பொங்கலுக்கு இதன் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  செல்வராகவன் - தனுஷ் - யுவன் மூவரும் இறுதியாக புதுப்பேட்டை படத்தில் ஒன்றாக பணிபுரிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்தப் படத்தை அடுத்து செல்வராகவனும் தனுஷும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் பணியாற்ற உள்ளனர்.  2024-ம் ஆண்டு அத்திரைப்படம் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Shalini C
  First published: