இயக்குநர் செல்வராகவன் மகளின் புது முயற்சி

இயக்குநர் செல்வராகவன் மகளின் புது முயற்சி

செல்வராகவன் குழந்தைகள்

இயக்குநர் செல்வராகவனின் மகள் யூடியூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

  • Share this:
தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். 2021-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இத்தம்பதிக்கு 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயரிட்டிருப்பதாக கீதாஞ்சலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செல்வராகவனின் மகள் லீலாவதி புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதை தனது இன்ஸ்டாகிராமில் அவரது தந்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தனது மகளின் கேம் (game) சேனலாக இது இருக்கும் என்றும், இதற்காக அவரே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கணிணியில் செலவிடும் நேரத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் கற்பனை மற்றும் உற்பத்தி திறனை உருவாக்கும் என்று தான் எண்ணுவதாகவும் செல்வராகவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)






செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மார்ச் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில்
தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: