சோழ இளவரசன் திரும்புகிறான்... ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாதபோதிலும், சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் நடித்த கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. அப்போது, வெளியான இந்தப் படம் சமீபத்தில் கொரோனா ஊரடங்குக்கு முன்னர் சென்னையில் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹவுஸ்புல் காட்சிகளுடன் படம் ஓடியது.

    அதேபோல, கொரோனா ஊரடங்கால் படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில் ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு செய்யப்பட்டது. அப்போதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர். இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    செல்வராகவனின் ட்விட்டைப் பகிர்ந்துள்ள தனுஷ், ‘முன் தயாரிப்புக்கான பணிக்கு மட்டும் ஒருவருடம் தேவைப்படும். ஆனால், இது செல்வராகவனின் கனவு படம். 2024-ல் இளவரசன் திரும்புகிறான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    படத்துக்கான போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. படம் 2024-ல் வெளியாகும் என்பதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையடுத்து, செல்வராகவன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் பட ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடிவருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: