'சோழன் பயணம் தொடரும்' - நாளை முதல் திரையரங்கில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன்!

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்

தனது தனித்துவமான படைப்பாற்றலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

 • Share this:
  இயக்குனர் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் 'புதுப்பேட்டை' ஆகிய படங்கள் நாளை மீண்டும் திரையரங்குகளில் வெளியாகின்றன.

  தனது தனித்துவமான படைப்பாற்றலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். காலம் கடந்தும் போற்றக் கூடிய பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். அதில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. உள்ளூர் கேங்ஸ்டர் படமான புதுப்பேட்டையில் செல்வராகவனின் தம்பி தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். சினேகா. சோனியா அகர்வால், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.  தவிர 12-ஆம் நூற்றாண்டின் சோழ பின்னணியை கொண்டு செல்வராகவன் இயக்கிய படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், புதிய கதை களத்தில் உருவாகியிருப்பதாக இயக்குநருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அப்போது இந்தப் படத்தை பார்க்காதவர்கள் கூட பின்னாட்களில் பார்த்து, தங்கள் பாராட்டுகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டனர்.  இந்நிலையில் நாளை செல்வராகவனின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரு படங்களும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகின்றன. புதுப்பேட்டை படத்தின் புதிய ட்ரெய்லரை ரீ-ட்வீட் செய்து, ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் செல்வா. அதோடு ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் குறித்த வீடியோவை பகிர்ந்திருக்கும் அவர், "உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இதோ மீண்டும் ஆயிரத்தில் ஒருவன்.  சோழன் பயணம் தொடரும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
  Published by:Shalini C
  First published: