யுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன்

யுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன்

செல்வராகவன், யுவன் சங்கர்ராஜா

யுவனின் செயல் செல்வராகவன் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
இயக்குநர், இசையமைப்பாளர் என இவர்களின் கூட்டணிக்காகவே ரசிகர்களிடம் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்றால் அது யுவன்சங்கர்ராஜா செல்வராகவன் கூட்டணியால் மட்டுமே முடியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இந்த கூட்டணி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘என்ஜிகே’ படத்தில் இணைந்தனர்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க 8-வது முறையாக தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.

‘நானே வருவேன்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலை யுவன் கம்போஸ் செய்து முடித்திருக்கிறார். அதைக்கேட்ட செல்வராகவன், தனது மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ வரும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: