மீண்டும் திரையரங்குகளில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்கள்.. ஏன் தெரியுமா?

புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  என்னதான் நம் வீட்டில் சொகுசாக இருந்தபடி ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்த்தாலும், திரையரங்குகளுக்கு சென்று அடிச்சி, பிடிச்சி டிக்கெட் வாங்கி கத்தி ஆர்பாட்டம் செய்து படம் பார்க்கும் சுகமே தனி தான். ஆனால் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்குகள்
  உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் தியேட்டரில் குடும்பத்துடன் சென்று படங்களை பார்த்து ரசிக்கும் பலருக்கும் இது கஷ்ட காலமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். பின்பு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைய தொடங்கிய பின் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

  ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி இருப்பதால் எந்த ஒரு முன்னணி நடிகர்களின் படமும் திரையரங்குகளுக்கு வரவில்லை. எனவே 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற
  படங்களை மீண்டும் திரையிட திரையரங்குகள் முடிவு செய்து வருகிறது.

  அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் மற்றும் 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் வெளியானபோது அவ்வளவு வரவேற்பு கிடைக்காத நிலையில், அண்மைக்காலமாக இந்த திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  எனவே ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: