ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செல்வராகவன் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் நீக்கம்

செல்வராகவன் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் நீக்கம்

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி திடீரென மாற்றப்பட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

கதை எழுதும் போது எத்தனைமுறை அடித்துத் திருத்துவார்களோ அதற்கு குறையாமல் படப்பிடிப்புத்தளத்திலும் மாற்றங்கள் செய்கிறவர் செல்வராகவன். இதன் காரணமாகவே அவரது இரண்டாம் உலகம் போன்ற படங்கள் போட்டதைவிட அதிக பட்ஜெட்டை உறிஞ்சின. எளிதில் திருப்தியடைக்கூடியவர் அல்ல என்பதுதான் செல்வராகவனின் பிளஸ்ஸும் மைனஸும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்குகிறார் செல்வராகவன்.

தாணு படத்தை தயாரிக்க, யுவன் இசையமைக்கிறார். அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக முதலில் கூறப்பட்டது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களின் கூட்டணி (செல்வராகவன், யுவன், அர்விந்த் கிருஷ்ணா) மீண்டும் ஒன்றிணைந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில் படம் ஆரம்பிக்கையில் அர்விந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு யாமினி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ALSO READ |  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ரஜினிகாந்த் அறக்கட்டளை

யாமினி சில்லு கருப்பட்டி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்துக்கும் அவரே கேமரா. அந்த நட்பில் அவரை ஒப்பந்தம் செய்தார். இப்போது அவரையும் மாற்றியிருக்கிறார். இந்த மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. புதிதாக யார் ஒப்பந்தமாவார்கள் என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director selvaragavan