சீதக்காதி படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதியை, சூர்யா வாழ்த்தியுள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர்தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பரசுராமன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் மௌலியும், லட்சுமி என்ற கேரக்டரில் நடிகை அர்ச்சனாவும் நடித்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் அப்டேட்களை தினமும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் படத்தில் நீதிபதியாக நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நடிகர் வைபவ்வின் சகோதரர் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் தனபால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் படக்குழு அறிவித்திருக்கிறது.
வயதான தோற்றத்தில் விஜய் சேதிபதி தோன்றியிருந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 3 நிமிடம் 9 விநாடிகள் ஓடக்கூடிய அந்த ட்ரெயலர் வீடியோவில் ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாகிவிட்டேனே என்ற ஒரே ஒரு வசனத்தை மட்டுமே விஜய் சேதுபதி பேசியுள்ளார். வழக்கம்போல தனது எதார்த்த நடிப்பை இந்த ட்ரெய்லரில் ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
சீதக்காதி ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே நடிகர் சூர்யா, விஜய் சேதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில், 8 நிமிடத்துக்கு விஜய் சேதுபதி சிங்கிள் ஷாட்டில் நடித்திருக்கிறார். அந்தக் காட்சியை காண காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இரு சக்கர வாகனத்தை லாவகமாகத் திருடும் நபர்! சிசிடிவி வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.