சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியான முதல் நாளில் ரூ.13.5 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் சீமராஜா வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரியும் நடித்திருந்தனர். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று காலை வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பை இந்தப் படம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இதுவரை தமிழ் திரை வரலாற்றில் இல்லாத நிகழ்வாக, ஒரே நாளில் பதிமூன்றரை கோடியை வசூலித்துள்ளது. சென்னையில் சில திரையரங்களில் சீம ராஜாவை இரவு ஒரு மணி காட்சியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளனர். சீமராஜா படத்தின் வசூல் மூலம் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் செய்த வசூல் சாதனை பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
படத்தின் முதல்நாள் வசூல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இதுவரை சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே முதல் நாள் வசூல் சீமராஜா படத்திற்கு தான் கிடைத்துள்ளது. புதிய சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன் என கூறியுள்ளார்.
🚩It’s official:
just received #SeemaRaja collection Reports..
Our #SeemaRaja creates new record at box office Day 1 collection 💪💪@Siva_Kartikeyan ‘s career best & Double digit Mark! It’s Huge!!
Proud team👑👍@ponramVVS @immancomposer @Samanthaprabhu2 @24AMSTUDIOS
— RD RAJA (@RDRajaofficial) September 13, 2018
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Box office, First day collection, Seemaraja, Sivakarthikeyan