சீமான் - சிம்பு படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

நடிகர் சிம்பு| இயக்குநர் சீமான்

  • News18
  • Last Updated :
  • Share this:
சிம்பு - சீமான் இணையும் புதிய படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த சீமான், நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த பிறகு கடந்த பல ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். அரிதாக ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் தற்போது ‘தவம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார். இந்தப் படம் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் என்றும் தன்னுடைய பாணியில் இருக்கும் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீமான் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு டாக்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார். எனவே மாநாடு படத்துக்கு பிறகு சீமான் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது.

முதல்வரை ஆண்டவன் பார்த்துக்கொள்வார்... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குமுறல் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: