• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மோடி படத்துக்கு தொடரும் தடை! தேர்தல் ஆணைய முடிவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

மோடி படத்துக்கு தொடரும் தடை! தேர்தல் ஆணைய முடிவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ள PM NARENDRA MODI படத்தின் வெளியீட்டிற்கு தேர்தலை காரணம் காட்டி, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மீதான தேர்தல் ஆணைய தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ள PM NARENDRA MODI படத்தின் வெளியீட்டிற்கு தேர்தலைக் காரணம் காட்டி, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, படத்தைப் பார்த்துவிட்டுத் தடையைத் தொடருவது குறித்து பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

படம் பார்த்தபிறகும் அதற்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்வதெனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இதனால் PM NARENDRA MODI திரைப்படம் மே 19-ம் தேதிக்கு முன்பு திரைக்கு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: