ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சதீஷ் நடிக்க "நாய்சேகர்" போன்ற பெரிய டைட்டில் தேவை.. வடிவேலுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பொருந்தும் - சிவகார்த்திகேயன்

சதீஷ் நடிக்க "நாய்சேகர்" போன்ற பெரிய டைட்டில் தேவை.. வடிவேலுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பொருந்தும் - சிவகார்த்திகேயன்

சதீஷ் நடிக்க "நாய்சேகர்" போன்ற பெரிய டைட்டில் தேவை.. வடிவேலுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பொருந்தும் - சிவகார்த்திகேயன்

சதீஷ் நடிக்க "நாய்சேகர்" போன்ற பெரிய டைட்டில் தேவை.. வடிவேலுக்கு எந்த டைட்டில் வைத்தாலும் பொருந்தும் - சிவகார்த்திகேயன்

"நாய்சேகர்" படம் சூட்டிங் முடிந்து ரெடியாகி விட்டது என நடிகர் சதீஷ் தெரிவித்தாகவும், நடிகர் வடிவேலுவிடம் சதீஷ் இது குறித்து  பேசியுள்ளாதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதளம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூனிஸ்ட் மதி வரைந்த கார்ட்டூன்களை வெளியிட்ட பின் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது "பெட்ரோல், டீசல் விலையை தாண்டி தண்ணீரின் விலை இருக்கும் என்பதை மதியின் கார்ட்டூன் காட்டுகிறது. 2001 முதல் 2003 வரை என் அப்பா கோவையில் வேலை செய்த போது, திருச்சியில் இருந்து கோவை வருவேன். திருச்சி வெப்பமாகவும், கோவை சிலுசிலுவெனவும் இருக்கும், இப்போது சூட்டிங்கிற்காக வரும் போது கோவையில் ஏ.சி. இல்லாமல் இருக்க முடியவில்லை.

இப்போது குடிக்க தனியாக தண்ணீர், பாத்திரம் கழுவ தனியாக தண்ணீர் என இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமயமானதா? அல்லது தண்ணீர் வணிகமயமானதால் பற்றாகுறையா? எனத் தெரியவில்லை. அந்த அரசியலுக்குள் போக விரும்பவில்லை. அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க தண்ணீரை வீணாக்க கூடாது.

பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறோம்? அல்லது சம்பாதிப்பதை தண்ணீர் வாங்கப் போகிறோமா? எனத் தெரியவில்லை. அம்மா, அக்கா, மனைவி, மகள் என பெண்களால் சூழப்பட்ட உலகில் வளர்க்கப்பட்டவன் நான், 17 வயதில் அப்பா  இறந்தது முதல் என்னை சுற்றி அந்த 4 பெண்கள் தான் உள்ளனர்.

Also read: பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் நடிகர் அஜித்.. சாகசப் பெண்ணிடம் ஆலோசனை!!

பெண்கள் மீதான சமுதாய பார்வை மாற வேண்டும், பெண்கள் பார்வையில் இந்த உலகம் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் இருக்கிறது. என் பையன் வளரும் போது அவன் எப்படி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக சொல்லித் தர வேண்டும், என்னை விட என் பையனை நல்லவனாக வளர்க்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த  நடிகர் சிவகார்த்திகேயன், பல வருடங்களாக நாம் பார்த்து ரசித்த கார்ட்டூன்களை வரைந்தவர் மதி. விழிப்புணர்வு மற்றும் கருத்துக்களை கார்ட்டூன் மூலம் உலகிற்கு சொல்வது தான் அவரது ஐடியா. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பத்திரமாக பார்க்கும் நிலை வரக்கூடாது என கூறிய அவர், குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது வணிகம் தான், அது பெரிய வணிகமாக கூடாது.

டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது தயாரிப்பாளர் எடுத்த முடிவு, தியேட்டரில் படம் வர வேண்டும் என்பது தான் எனது ஆசையும். எது சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தேன்.

தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம், எனது படம் ஒடிடியில் வெளியாகமால் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம், படத்தை வெளியிடுவது குறித்து நடிகர்கள் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது.

தற்போது வெளியே வரும் படங்களை வியாபாரம் செய்வது கஷ்டமாக உள்ளது. படம் ரீலிஸ் ஆனால் தான் அதை நம்பியுள்ளவர்கள் வேலை நடக்கும், நாய்சேகர் படம் சூட்டிங் முடிந்து ரெடியாகி விட்டது.

நடிகர் வடிவேலிடம் சதீஷ் இதைப் பற்றி பேசியுள்ளார். சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைட்டில் தேவைப்படுகிறது, வடிவேலுக்கு அது தேவைப்படாது, எந்த டைட்டில் வைத்தாலும் அவருக்கு பயங்கரமாக தான் இருக்கும். படத்தின் டைட்டில் தமிழில் வைப்பது நல்லது, நானும் தமிழில் டைட்டில் வைக்க சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Esakki Raja
First published:

Tags: Actor Sathish, Actor Vadivelu, News On Instagram, Sivakarthikeyan