சூர்யா 40 - தம்பியைத் தொடர்ந்து அண்ணனுடன் இணைந்த பாகுபலி பிரபலம்!

பாண்டிராஜ் மற்றும் சூர்யா

சூர்யா 40’ திரைப்படத்தில் 5 வேடங்களில் சூர்யா நடிப்பதாகவும், இதில் ஒன்று முதலமைச்சர் வேடம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

 • Share this:
  சூர்யாவின் அடுத்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜின் புதிய படத்தில் நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. சூர்யா 40 என்றழைக்கப்படும் இந்தப் படத்தில், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், டி.இமான் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே ’சூர்யா 40’ திரைப்படத்தில் 5 வேடங்களில் சூர்யா நடிப்பதாகவும், இதில் ஒன்று முதலமைச்சர் வேடம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலை மறுத்த இயக்குநர் பாண்டிராஜ், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

  இந்நிலையில் தற்போது சூர்யா 40 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். தவிர, கார்த்தியின் தம்பி படத்திலும் நடித்திருந்தார். தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: