சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகத்தில் சத்யராஜ்?

சத்யராஜ்

2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 • Share this:
  ’சூது கவ்வும் 2’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்த படம் 'சூது கவ்வும்'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  அந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்த பின்பும், அதன் 2-ம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சூது கவ்வும் 2 படத்தை 'யங் மங் சங்' படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்க, தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிப்ரவரியில் படபிடிப்பை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: