• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’உன் துணிச்சலை வணங்குகிறேன்’ - சூர்யாவுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சத்யராஜ்

’உன் துணிச்சலை வணங்குகிறேன்’ - சூர்யாவுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சத்யராஜ்

நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ்

இந்த பிறந்தநாளுக்கு சமூகவலைதளத்தில் பதிவு செய்யவிரும்புகிறேன். சமூக நீதிக்காக நீ குரல் கொடுத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமூக நீதிக்காக நீ குரல் கொடுத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று சூர்யாவுக்கு நடிகர் சத்யராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். திரைப்பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை சூர்யா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவருடைய பேச்சுக்கு, பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, சூர்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா பிறந்த நாள் இன்று!

    இந்தநிலையில், நடிகர் சத்யராஜ் சூர்யா ஆதரவு தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘சூர்யா, பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீ ஒரு வயது குழந்தையாக இருக்கும்வரை உன்னைத் தூக்கி கொஞ்சியிருக்கிறேன். உன்னுடைய எல்லா பிறந்தநாளுக்கும், போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளேன். இந்த பிறந்தநாளுக்கு சமூகவலைதளத்தில் பதிவு செய்யவிரும்புகிறேன். சமூக நீதிக்காக நீ குரல் கொடுத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கும் உணர்வு, நமக்கு ஏன் வம்பு என்பதுதான். அதுவும் பிரபலமாக இருக்கும் ஒருவருக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமாக இருக்கும்.

    சமூக விஷயங்களுக்காக எத்தனையோ பேர் குரல் கொடுத்துள்ளனர். நானும், சில இடங்களில் குரல் கொடுத்துள்ளனர். ஒரு பிரபல நடிகராக, மாஸ் நடிகராக இருந்துகொண்டு குரல் கொடுப்பதில் இன்னும் சில சிக்கல்கள், சில இழப்புகள் இருக்கின்றன. பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும். அதனை, நான் அனுபவமாக உணர்ந்துள்ளேன். அதனால, கல்விக்காக குரல் கொடுத்ததை நான் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். அதுவும், வெறுமனே நுனிப்புல் மேய்ஞ்சு பேசாமல், ஆழமா, இறங்கி அலசி ஆராயந்து உன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளாய். இந்த பிறந்தநாளுக்கு உன்னைவிட வயதில் மூத்தவன் என்பதால் வாழ்த்துகிறேன். உன்னுடைய துணிச்சலை நான் வணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: