இறுதிக்கட்டத்தில் தனுஷ்-கார்த்திக் நரேன் படம்.. ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட சத்ய ஜோதி பிலிம்ஸ்

தனுஷ்

தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கிவரும் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.

 • Share this:
  ஜகமே தந்திரம் படத்தை முடித்த தனுஷ், ஹாலிவுட்டில் தயாராகும் தி க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜுன் 30 சென்னை திரும்பியவர், அடுத்த நாளே ஹைதராபாத்துக்கு கிளம்பினார். அங்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்பாத இந்தப் படம்தான் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளது.

  இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் தனுஷும், கார்த்திக் நரேனும் இருக்கும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விவேக் பாடல்கள் எழுதுகிறார். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். விரைவில் படப்பிடிப்பை முடித்து செப்டம்பரில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

     இந்தப் படத்துக்குப் பிறகு செல்வராகவன், சேகர் கம்முலா, ராம்குமார், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கங்களில் தலா ஒரு படம் தனுஷ் நடிக்க உள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: