Actor Dhanush : தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சத்யஜோதி பிலிம்ஸ்

நடிகர் தனுஷ்

தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Share this:
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தது.

    தி க்ரே மேன் ஆங்கிலப் படத்தை முடித்து சென்னை திரும்பிய தனுஷ் மறுநாளே ஹைதராபாத்தில் நடந்த கார்த்திக் நரேனின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். த்ரில்லர் படமான இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. மாளவிகா மோகன் நாயகி. ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.





    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தனர். அதன்படி, நாளைக்காலை (ஜுலை 28) 11 மணிக்கு படத்தின் பர்ட் லுக்கை வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: