Home » News » Entertainment » SASIKUMAR TO STAR IN VIRUMANDI S PERIOD FILM SET IN THE 70S MSB

1970-களில் நடந்த நிஜ கதையில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமார்

விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார்.

1970-களில் நடந்த நிஜ கதையில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமார்
இயக்குநர் விருமாண்டி உடன் சசிகுமார்
  • Share this:
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் க/பெ.ரணசிங்கம். கொரோனா அச்சுறுத்தலால் திரையில் வெளியாகாமால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.


இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள். ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’, ‘எம்.ஜி.ஆர் மகன் ’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதுதவிர பாக்யராஜ் இயக்கி நடித்து ஹிட்டான ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் சசிகுமார் கவனம் செலுத்தி வருகிறார். பாக்யராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
First published: January 19, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories