சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ ட்ரெய்லர் ரிலீஸ்

ராஜவம்சம் பட ஸ்டில்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ராஜவம்சம் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவர் கதிர்வேலு. சசிகுமார் நாயகனாகவும், நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடித்திருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தில் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சன் டிவியில் வெளியிடப்பட்டுள்ளது.

2 நிமிடங்கள் நீளம் கொண்ட ட்ரெய்லரில் உலகமயமாதல், இயற்கை பாதிப்பு, கார்ப்பரேட் அரசியல், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே நகைச்சுவை நடிகர் சதீஷ், யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகளும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.முன்னதாக இந்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ராஜவம்சம்’ தவிர சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதுதவிர பாக்யராஜ் இயக்கி நடித்து ஹிட்டான ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் சசிகுமார் கவனம் செலுத்தி வருகிறார். பாக்யராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: