ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சமுத்திரக்கனிக்கு சவால் விட்ட சசிகுமார்!

சமுத்திரக்கனிக்கு சவால் விட்ட சசிகுமார்!

சமுத்திரக்கனி - சசிக்குமார்

சமுத்திரக்கனி - சசிக்குமார்

நடிகர் சசிகுமார் நடிகர்கள் சமுத்திரக்கனி, நிகிலா விமல் மற்றும் அஞ்சலிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு, அதை இன்னொருவரை செய்ய சொல்லுவது பிரபலங்களுக்கு இடையே நிகழும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் சசிகுமார் நடிகர்கள் சமுத்திரக்கனி, நிகிலா விமல் மற்றும் அஞ்சலிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கெடுத்த சசிகுமார், அவரது சென்னை இல்லத்தில் மரக்கன்றை நட்டார். குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்டு, மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரால் ஈர்க்கப்பட்டதால், தான் இந்த இதில் பங்கேற்றதாக அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் படத்தில் தல – தளபதி இயக்குநர்!

மரங்கள் மாசுபாட்டைக் குறைக்கும் என்பதால் மரங்களை நட்டு அவற்றைக் காப்பாற்றுவது அனைவரின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார் சசிகுமார். அதோடு இந்த சவாலை தொடர நடிகர் சமுத்திரகனி நடிகைகள் நிகில் விமல் மற்றும் அஞ்சலி ஆகியோரையும் அவர் பரிந்துரைத்தார்.

முன்னதாக கடந்த வாரம் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கெடுத்த நடிகை மீனா, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Sasikumar