• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிப் .1-ம் தேதி வெளியாகும் விஜய் ரசிகரின் படம்

பிப் .1-ம் தேதி வெளியாகும் விஜய் ரசிகரின் படம்

நடிகர் - ஜி.வி.பிரகாஷ்

நடிகர் - ஜி.வி.பிரகாஷ்

சர்வம் தாளமயம் படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் அறிவித்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்வம் தாளமயம் படம் பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் அறிவித்துள்ளார்

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்றது.

    2018-ம் ஆண்டும் நவம்பர் மாதம் 23-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நிஜத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷ் படத்திலும் விஜய்யின் ரசிகராகவே வலம் வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் படம் பிப்ரவரி 1-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்



    மேலும் பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: