• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சர்வம் தாள மயம் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

சர்வம் தாள மயம் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

    சமீபத்தில் இந்தப் படம் டோக்கியோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முன்னதாக படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது காத்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

    படத்தின் அனைத்து பணிகளையும் முடித்திருக்கும் படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி டிசம்பர் 28-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    இயக்குநர் ராஜீவ் மேனன், இதற்கு முன்னதாக மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சாட்சி சொல்லவந்தவர் கொடூரமாக அடித்துக்கொலை! - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: