ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சர்வம் தாளமயம் லிரிக்கல் வீடியோ

சர்வம் தாள மயம் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

சர்வம் தாளமயம் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வம் தாளமயம் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த 23-ம் தேதி படத்தின் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இசையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.





முன்னதாக இந்தப் படம் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: