சார்பட்டா கதை என்னுடையது இல்லை - அறம் கோபி விளக்கம்

சார்பட்டா கதை என்னுடையது இல்லை - அறம் கோபி விளக்கம்

சார்பட்டா பரம்பரை ஃபர்ஸ்ட் லுக்

சார்பட்டா திரைப்படத்தின் கதைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறம் படத்தின் இயக்குனர் கோபி விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என சட்டப் போராட்டம் நடத்தியவர் இயக்குனர் கோபி நயினார். பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் திரைப்படத்தின் கதையும் கோபி எழுதியது என்ற சர்ச்சை கிளம்பியது. ஆனால் அது தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று அப்போது கோபி கூறியிருந்தார். அதன்பின் நயன்தாராவை நாயகியாக வைத்து அவர் இயக்கிய அறம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அறம் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே குத்துச் சண்டையை மையப்படுத்தி ஒரு  திரைப் படத்தை இயக்கப்போவதாக கோபி தனது நண்பர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா திரைப்படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருப்பதால் இதுவும் கோபியின் கதையாக இருக்கலாம் என திரைத்துறையில் சர்ச்சைப் பேச்சுகள் தொடங்கின.

அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள இயக்குனர் கோபி, நான் குத்துச் சண்டையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான். ஆனால் குத்துச் சண்டையை வைத்து ஆயிரம் திரைப்படங்கள் இயக்கலாம். இயக்குனர் ரஞ்சித் இயக்கவிருக்கும் சார்பட்டா படத்தின் கதைக்கும் என்னுடைய கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்படியான வதந்தியே யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்று கூறினார். மெட்ராஸ் திரைப்படத்தின் சர்ச்சைக்கு பின்னர் இயக்குனர் கோபியை பா.ரஞ்சித் ஒரு மேடையில் சந்தித்து நட்பு பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: