• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்காரில் எத்தனை பாடல்கள் தெரியுமா?: ரகசியத்தை உடைத்த படக்குழு!

சர்காரில் எத்தனை பாடல்கள் தெரியுமா?: ரகசியத்தை உடைத்த படக்குழு!

சர்கார் பட போஸ்டர்

சர்கார் பட போஸ்டர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிம்டாங்காரன், ஒருவிரல் புரட்சி ஆகிய 2 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

    மீதமுள்ள டாப் டக்கர், ஓஎம்ஜி பொன்னு, சிஇஓ இன் தி ஹவுஸ் ஆகிய பாடல்கள் நாளை மாலை வெளியாகும். இசை வெளியீட்டிற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் தலைப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை மட்கிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: