சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முடிவு

Sarkar | விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவசப்பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதிமுகவினர் எதிர்ப்பு

Web Desk | news18
Updated: November 8, 2018, 7:06 PM IST
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முடிவு
சர்கார் டீசரில் ஒரு காட்சி
Web Desk | news18
Updated: November 8, 2018, 7:06 PM IST
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.

மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தன.

இதனை அடுத்து, திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து படத்தயாரிப்புக் குழுவிடம் பேசியதாகவும், பேச்சுவார்த்தையில் காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று நீக்கப்பட்டு, நாளை படம் திரையிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்