விஜய்-ன் எளிமையை புகழந்து வரலட்சுமி வெளியிட்ட ’சர்கார்’ வீடியோ

Web Desk | news18
Updated: October 9, 2018, 10:13 PM IST
விஜய்-ன் எளிமையை புகழந்து வரலட்சுமி வெளியிட்ட ’சர்கார்’ வீடியோ
Web Desk | news18
Updated: October 9, 2018, 10:13 PM IST
சர்கார் படத்தில் நடித்த அனுபவங்களை வரலட்சுமி சரத்குமார் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் ஒவ்வொருவரும் படம் பற்றிய ஒருசில விஷயங்களை மேடையில் ரசிகர்கள் மத்தியில் பேசியிருந்தனர்.

இந்நிலையில் படத்தில் நடித்த அனுபவம் குறித்த வரலட்சுமி சரத்குமாரின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 2 நிமிடத்திற்கும் குறைவாக ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் நடிகை வரலட்சுமி பேசியிருப்பதாவது, “ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இயக்குநர் முருகதாஸ் இந்த வாய்ப்பையும் நல்ல கதாபாத்திரத்தையும் எனக்கு கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர். இயக்குநர் முருகதாஸ் மிகவும் இனிமையானவர். நடிப்பதற்க்காக திரைத்துறைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப்பெரிய கனவு இருக்கும். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் விஜய் படத்தில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கிறேன் என்பதே எனது நீண்ட நாள் கனவு. சர்கார் படத்தை திரையில் பாருங்க. திருட்டு டிவிடி-யில் பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Loading...
முன்னதாக சர்கார் பட விழாவில் பேசிய நடிகை வரலட்சுமி, “நான் விஜயின் வெறியர். விஜய் பற்றி யாராவது பேசினால் சண்டைக்கு சென்று விடுவேன். அது அவருக்கே கூட தெரியும். கீர்த்தி சுரெஷுடன் இரண்டு படங்களில் தற்போது நடித்துள்ளேன். இன்னும் நிறைய படங்கள் நடிக்க விரும்புகிறேன்” என்றும் கூறியிருந்தார்.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...