முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பணிந்தது விஜய் சர்கார்... நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

பணிந்தது விஜய் சர்கார்... நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

விஜய்

விஜய்

சர்கார் படத்தில் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடியுள்ள காட்சி நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சர்கார் படத்தில் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடியுள்ள காட்சி நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படம் வெளியான 2 நாட்களில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்தது. அதேநேரத்தில் இந்தப் படத்தை சர்ச்சைகளும் விடாது துரத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை படம் விமர்சிப்பதாகவும் , கோமளவல்லி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருந்தார்.

இதுதவிர கோமளவல்லி என்ற பெயர் வரும் இடத்தில் கோமள என்ற சொல்லுக்கு மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 வருடம் என்ற சொல் நீக்கப்பட்டு மறு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: சர்காரில் ஜெயலலிதாவை வில்லியாக சித்தரித்து பலரின் மனதை விஜய் புண்படுத்திவிட்டார் - தமிழிசை

First published:

Tags: Censor Board, Sarkar