முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்கார் படத்தை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்!

சர்கார் படத்தை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்!

சர்கார் பட போஸ்டர்

சர்கார் பட போஸ்டர்

ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு உதவி இயக்குநர்கள் வேண்டும் என கேட்க எனது குறும்பட லிங்க்-ஐயும் சேர்த்து அவருக்கு மெயில் அனுப்பினேன். அதன்பின்னர் எனது குறும்படம் ’கத்தி’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது என்கிறார் அன்பு ராஜசேகர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'சர்கார்’. இந்தப் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் இன்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பு ராஜசேகர், நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமம் தான் எனது சொந்த ஊர். நான் கடந்த 2012-ம் ஆண்டு 'தாகபூமி' என்ற குறும்படத்தை எடுத்தேன். அந்தப் படத்தை நம்மாழ்வார் வெளியிட்டார்.

இயக்குநர் பாலுமகேந்திரா தலைமை வகித்த குறும்படப் போட்டியில் அப்படம் 2-ம் பரிசைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் நார்வே திரைப்பட விழாவில் எனது குறும்படம் திரையிடப்பட்டது. மேலும், பல பத்திரிகைகள் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு உதவி இயக்குநர்கள் வேண்டும் என கேட்க, எனது குறும்பட லிங்க்-ஐயும் சேர்த்து அவருக்கு மெயில் அனுப்பினேன். அதன்பின்னர் எனது குறும்படம் ’கத்தி’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது.

இதைப் பற்றி வழக்கறிஞர் மூலமாக இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு (லைகா) நோட்டீஸ் அனுப்பினேன். இதற்கு, லைகா நிறுவனம் மட்டும் பதில் அனுப்பியது. ஆனால் இயக்குநர் முருகதாஸும், நடிகர் விஜய்யும் பதில் அளிக்கவில்லை.

இதனால், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இன்று வரை முருகதாஸ் எனக்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் வெளிவர இருக்கிறது. அதனால், இன்றுவரை எனக்கு எந்தவொரு பதிலும் தராமல் இருக்கும் முருகதாஸின் சர்கார் படம் வெளிவரக்கூடாது என சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆணையரும் விசாரிப்பதாக சொல்லியுள்ளார்" என்றார் அன்பு ராஜசேகர்.

Also see:

First published:

Tags: A.R.murugadoss, Actor vijay, Chennai, Commissioner Office, Police complaint, Sarkar