சர்கார் படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைந்துள்ள படம் சர்கார். ஏற்கெனவே இந்த கூட்டணியில் வெளியான 2 படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதுமட்டுமின்றி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் அரசியல் பேச்சு, படக்குழு கொடுத்த விளம்பரங்களும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த உற்சாகத்தை விஜய் ரசிகர்கள் நேற்று கொண்டாட்டங்களாக வெளிப்படுத்தினர். முன்பதிவு மட்டுமின்றி முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்து திரையரங்குகளிலும் வேகமாக விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்ததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வெற்றிகரமாக முதல்நாளைக் கடந்திருக்கும் சர்கார் படத்தின் வசூல் ரூ.30 கோடியை கடந்திருக்கிறது. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ்படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலில் ரூ.2 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கிறது சர்கார். இதற்கு முன்னதாக ரஜினியின் காலா படம் ரூ.1.76 கோடி வசூலித்திருந்த நிலையில் அந்த சாதனையை சர்கார் முறியடித்திருக்கிறது.
மும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்ட சர்கார் சுமார் ரூ.2.31 கோடி வசூல் செய்திருக்கிறது.
The hugely awaited #Tamil biggie #Sarkar, which opened today, has got fantastic showcasing outside Tamil Nadu as well... In Mumbai, for instance, the plexes have allotted 8, 9, even 11 and 12 shows every day, which is a rarity... The hype is truly tremendous... #SarkarDiwali
— taran adarsh (@taran_adarsh) November 6, 2018
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Box office, Sarkar