முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்கார் தீபாவளிடா...கீர்த்தி சுரேஷ் அசத்தல் பேச்சு!

சர்கார் தீபாவளிடா...கீர்த்தி சுரேஷ் அசத்தல் பேச்சு!

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ்

  • Last Updated :

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது சர்கார் தீபாவளிடா என்று கூறி அசத்தலாக பேசினார்

நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், ``நான் தூரத்தில் இருந்து விஜயை ரசித்திருக்கிறேன். இப்போது பக்கத்தில் இருந்து பார்க்கிறேன். அவருடன் 2 படங்கள் நடித்திருக்கிறேன். அவருடன் இரண்டு படங்களில் நான் பணியாற்றியிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமனிதரைப் பார்ப்பது போல் இருக்கும். அவரின் நடிப்பை எளிமையை, பணிவை பார்த்து நான் ரசிக்கிறேன்.

சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் வந்த போது அடிடா மேளத்த, போடுறா வெடிய என்று ட்வீட் போட்டேன். தீபாவளிக்கு படம் வெளியாகிறது. இப்போதும் சொல்கிறேன். இது சர்கார் தீபாவளிடா. கேரளாவில் விஜய்-ன் போக்கிரி பட வெற்றி விழாவில் புகைப்படம் எடுத்தேன். அந்த காலத்தில் செல்ஃபி இல்லை” என்றார்.

First published:

Tags: Keerthy suresh, Sarkar audio launch, Sarkar songs